கன்னியாகுமரி அக், 27
போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, உசூர் மேலாளர் சுப்பிரமணியன், அகஸ்தீஸ்வரம் வட்டாச்சியர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.