Spread the love

வேலூர் அக், 21

வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சியில் நடைபெறும் இறப்பின் போது, இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கிராமத்திற்கும், சுடுகாட்டிற்கும் வெகு தொலைவு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசிவகுமார், தனது சொந்த செலவில் ஊராட்சியில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல, இலவசமாக இறுதி ஊர்வல வாகன சேவையை தொடங்கி வைத்தார். அதே போல் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச ஆட்டோ திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்காக வழங்கி உள்ளார்.

இதன் தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார், துணைத் தலைவர் விஜயபாலன், ஒன்றிய கவுன்சிலர் குமார், ஊராட்சி செயலாளர் நந்தகுமார், வார்டு உறுப்பினர்கள் பத்மா, தனலட்சுமி, உஷா, ஜெகநாதன், திருமால், கோவிந்தம்மாள், சக்தி மற்றும் நைல்நதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *