தென்காசி அக், 18
வாசுதேவநல்லூரில் அதிமுக. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக. ஓ.பி.எஸ். அணி சார்பில் பஸ்நிலைய நுழைவு வாயில் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளரும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான மனோகரன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு லட்டு, கேசரி, இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உள்ளார் மூர்த்தி, நகர இளைஞரணி முருகன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் குருசாமி, பாலசுப்பிரமணியன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.