சேலம் அக், 17
சேலத்தில் பெய்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி நகரில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து நேற்று மாலை அந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.