தர்மபுரி அக், 14
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார். நவீன அறுவை சிகிச்சை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்தது.
இம்முகாமுக்கு பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கினார். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொது அறுவை சிகிச்சை இணை பேராசிரியர் தீப பிரியா மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.