தென்காசி அக், 14
மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், சதன் திருமலை குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்து மாதவன், ஷேக் அப்துல்காதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.