தென்காசி அக், 21
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நமக்கு நாம் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தென்காசி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், சங்கரன்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முதன்மை செயல் அலுவலர் முனியாண்டி ஆண்டறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்கள் மற்றும் வேளாண்மை கருவிகள் வழங்கப்பட்டது. முடிவில் இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.