செங்கல்பட்டு அக், 11
மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நுண்ணுயிர் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் மக்கும் குப்பையில் இருந்து எப்படி உரம் தயாரிக்கப்படுகிறது என்று விளக்கமாக கேட்டார். இதனைத் தொடர்ந்து மண்ணிவாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், கூடுதல் இயக்குனர் குமார், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், வெங்கட் ராகவன், ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், ஊராட்சி துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஊராட்சி மன்ற செயலாளர் ராம பக்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.