கிருஷ்ணகிரி அக், 9
கெலமங்கலம் ஒன்றியத்தில், கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள் மற்றும் மின்மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதை சட்ட மன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.