நெல்லை அக், 8
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடியில் நேற்று இரவு தனியார் மினி பஸ் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் இருக்கைகள் தீப்பிடித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனே தகவலறிந்து அங்கு விரைந்து வந்த உவரி காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தனியார் பேருந்து என்பதால் தொழில் போட்டி காரணமாக யாரேனும் இந்த செயலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.