நெல்லை அக், 8
திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளம் ஊரை சேர்ந்த வி.பி.என்.மோட்டார் நிறுவனத்தை சார்ந்த பொன்குமார் என்பவரின் மகள் அஞ்சுகிராமத்தில் உள்ள ஜான்ஸ் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் தோட்ட பள்ளிக்கன் விளை கோவில் விழாவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாக
ரூ.10,000 ஐ வென்றார்.
மேலும் பரிசுத்தொகையினை வென்ற மாணவி ரிஷாலி அதனை தனது சொந்த ஊரான செட்டிக்குளத்தில் உள்ள பஞ்சாயத்து மூலம் நலத்திட்டங்களுக்கு உதவிடுமாறு அதனை பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமாரை அவரது வீட்டில் சந்தித்து வழங்கினார்.
மேலும் சிறிய வயதில் சேவை மனப்பான்மையுடன் பிறருக்கு உதவும் தொண்டு உள்ளத்தினனை பஞ்சாயத்து தலைவர் மற்றும் செட்டிகுளம் ஊர் பொதுமக்கள் மனதார பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாணவியின் தந்தையும் உடனிருந்தார்.