Spread the love

நெல்லை அக், 7

நெல்லை மாவட்டம் ஊர்காவல் படை பிரிவில் பிரம்மநாயகம் என்பவர் ஊர்காவல் படை காவலராக பணியாற்றி வருகின்றார்.பிரம்ம நாயகம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வண்ணார் பேட்டை பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த காவலாளி முத்து சரவணனிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை குறிப்பிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் காவலாளியை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முத்து சரவணன் ஊர் காவல் படை காவலர் பிரம்ம நாயகத்துடன் கைகலப்பு ஏற்பட்டு இருவரும் மாநகரின் பிரதான நெடுஞ்சாலையில் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ஊர்க்காவல் படை காவல் பிரம்ம நாயகம் நடு ரோட்டில் நடந்த சண்டை தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர கிழக்கு மண்டல காவல்துறை ஆணையர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்த பலரும் பிரம்ம நாயகம் மீதான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *