நெல்லை அக், 7
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் – கடையம் சாலையில் வி.கே.புரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்த பகுதியிலுள்ள கடைகளுக்கு அடிக்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் பைக் சென்றுள்ளது.
தொடர்ந்து காரை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர், அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வீ.கே.புரம் காவல் துறையினர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த வி.கே.புரம் காவல் துறையினர் இதுதொடர்பாக கடையம் அருகேயுள்ள மாலிக் நகர் பகுதியை சேர்ந்த அஜ்மீர் அலி, முகமது ஹாலித் மற்றும் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த முகமது தாவிஹ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ புகையிலை பொருட்களையும், கார், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.