Spread the love

புனே செப், 25

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் பெரிய ஏற்றமில்லாதது ஆகியவை காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டிருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

முன்னதாக உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சம் வீரர்களை திரட்டப் போவதாக ரஷியா அறிவித்திருந்தது. இந்த காரணங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றது. அதனால், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *