Spread the love

தருமபுரி ஆகஸ்ட், 2

ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

மாவட்ட அளவில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, நாளை ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Vanakambharatham#Dharmapuri#localholiday#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *