சேலம் செப், 21
சேலம் அதிமுகவின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.
இதற்கு கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம், சட்ட மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் செல்வராஜூ, சேகரன், சக்திவேல், ரவிச்சந்திரன், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், வினாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.