நெல்லை செப், 16
முதல்மைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு..க ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.