நெல்லை செப், 15
முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, அவைத் தலைவர் சுப. சீதாராமன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யூனியன் சேர்மன் கே. எஸ். தங்கபாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் உலகநாதன், கோகுல வாணி, பவுல்ராஜ், ரவீந்தர், கிட்டு மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், புவனேஸ்வரி, ஆவின் ஆறுமுகம் பேச்சி பாண்டியன், வேலங்குளம் முருகன், வக்கீல் தினேஷ், வல்லநாடு முத்து உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகரத்தின் முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான மாலை ராஜா தலைமையில் ஏராளமான திமுக. நிர்வாகிகள் தச்சநல்லூரில் உள்ள அண்ணா சிலை மற்றும் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மைதீன் கான், தச்சநல்லூர் பகுதி செயலாளர் முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் மணி, அருண்குமார், பூக்கடை அண்ணாதுரை, இளைஞர் அணி மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து சந்திப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.