சேலம் செப், 10
ஆத்தூர் ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் ஆயில் மற்றும் கிரீஸ் உள்ளிட்டவைகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த குடோனில் இன்றுதீ விபத்து ஏற்பட்டது. மேலும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து பெருமளவில் தீ பற்றியது. ஆத்தூர் தீயணைப்பு துறையினர் தீ யை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நஷ்டமான பொருட்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.