Spread the love

தர்மபுரி செப், 4

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தூவுதல் முகாம் அக்கமனஅள்ளி மலைப்பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜ்குமார் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பரமேஸ்வரன், மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனக்காப்பாளர்கள் வேடியப்பன், சந்தியா, ஹேமசுந்தர், ஸ்ரீராம், தேவகி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். 1,000 வேம்பு, புங்கன் மர விதைகள் மலைப்பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மூலம் தூவப்பட்டன. மேலும் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *