புதுடெல்லி ஜன, 29
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சிஇஓ பதவியில் இருந்து ஜெட் அலார்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை போட்டி வருமானம் தவறாக கையாளப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து ராஜினாமா செய்துள்ளார். எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டி துவங்க உள்ள நிலையில் இவரின் ராஜினாமா முக்கியத்துவம் பெறுகிறது.