சென்னை ஜன, 8
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன் ஜோஜூ ஜார்ஜ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.