சென்னை டிச, 9
SK25 படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ₹140 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து போட்டோ சூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.