கேரளா டிச, 9
சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் அதிகமாக 89 ஆயிரத்து 840 பேரும், நேற்று 90,000 பேரும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் பத்தாயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி என கூறப்பட்டிருந்த நிலையில் அதை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.