புதுடெல்லி செப், 5
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, SC ல் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை இன்று விசாரிக்க உள்ளது. மனுவில் தொடர்ந்து தான் சிறையில் இருக்கும் வகையில் தீட்டப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சிபிஐ கைது நடவடிக்கை இருப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.