சென்னை ஆக, 27
உள்நாட்டு முதலீடுகளை தக்கவைக்க முடியாத முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்வது வேடிக்கையானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட வலியுறுத்திய அவர், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்வது குறிப்பிடத்தக்கது.