சென்னை செப், 3
மாநில பாடத்திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜகப் போக்கையே காட்டுவதாக செல்வ பெருந்தகை கண்டித்துள்ளார். ஆர் என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரா என்ற கேள்வி எழுப்பிய அவர், தமிழக விரோத பேச்சை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறியுள்ளார்.