சென்னை ஆக, 26
விஜய் கட்சியின் மாநாட்டுக்கு தன்னை அழைக்க மாட்டார், அழைக்கவும் கூடாது என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துப் போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக திட்டவட்டமாக கூறிய அவர், தேர்தல் காலத்தில் தம்பிகள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்து யோசிக்கலாம் என்றார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு செய்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.