புதுடெல்லி ஆக, 10
பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
