புது டெல்லி ஆக, 9
வால்மீகி, அருந்ததியர் உள்ளிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசுகளின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. எஸ்சி, எஸ்டி பிரிவில் உள்ள பின் தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை அளிக்கும் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மல்லேலா வெங்கட ராவ் என்பவர் சார்பில் வக்கீல் ரித்தேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.