சென்னை ஜூலை, 27
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், மாற்றாநீதாய் போக்குடன் தமிழகத்தை பாரதிய ஜனதா கட்சி வஞ்சித்து விட்டதாகவும், வெள்ள பேரிடர் நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதியை வழங்கவில்லை எனவும் தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது