கன்னியாகுமரி ஜூலை, 25
காமராஜர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறும் வகையில் குமரியில் அவருக்கு 1000 அடி சிலை வைக்க வேண்டும் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சிலையின் கீழ் காமராஜரின் காமராஜரின் பெருமைகளை எடுத்து கூறும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கவும் மக்களவையில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சிலை அமைப்பதன் மூலம் காமராஜரின் புகழ் பரவுவது மட்டுமின்றி கன்னியாகுமரியில் சுற்றுலா துறையில் வளர்ச்சி பெறும் என்றார்.