சென்னை ஜூலை, 21
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடக்கிறது. அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி அதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.