சென்னை ஜூலை, 20
அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் சென்னையில் முதற்கட்டமாக கடந்த பத்தாம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இக்கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.