விருதுநகர் ஆக, 29
ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இணைப்பு வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததுடன் ஆதார் அட்டைையயும் இணைத்து வருகின்றனர். ஆலங்குளம் பகுதிகளில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 50 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் இந்த பணி முடிவுபெறும் என வாக்குசாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.