விழுப்புரம் ஜூலை, 3
விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைந்ததை எடுத்து அங்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக பாஜக, நாதக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் வரும் 6,7,8 ஆகிய தேதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.