காஞ்சிபுரம் ஆக, 29
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் கூலித்தொழிலாளி. காஞ்சிபுரம் சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது குடை பிடித்தபடி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த எல்லப்பன் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்து போன எல்லப்பன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.