கோவை ஜூலை, 1
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். டாஸ்மாக் என்ற போர்வையில் அரசே மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றார்.