சென்னை ஜூலை, 1
பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் மூன்று மணி நேரம் தாரை தப்பட்டைகள் முழங்க கொண்டாடத்துடன் பேரணி நடைபெற்றது.