விழுப்புரம் ஜூன், 15
விக்ரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட்டை இழப்பார்கள் என்ற அவர், பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது என்றார். தமிழிசை பொது இடத்தில் அமித் ஷா வை அவமதித்ததை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.