புதுடெல்லி ஜூன், 11
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.