புதுடெல்லி ஜூன், 5
தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியாளர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் பேசிய அவர், இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தங்கள் மீது வைத்து நம்பிக்கை வைத்துள்ளதால் தான் மூன்றாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.