புதுடெல்லி ஜூன், 2
உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மக்களவை தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருந்தார். தொடர்ந்து ஜாமீன் நீட்டிப்புகோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு ஜூன் 5க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று அவர் சிறை செல்கிறார்.