புதுடெல்லி ஏப்ரல், 28
தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களம் பரபரப்பாக இருந்ததன் காரணமாக ஆளுநர் வெளியே தெரியாமல் இருந்து வந்தார். தொடர்ந்து வாக்குபதிவு அன்று தனது மனைவியுடன் சென்னையில் வாக்கு செலுத்தினார். இந்நிலையில் இன்று சொந்த காரணங்களுக்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.