மணிப்பூர் ஏப்ரல், 28
மணிப்பூரில் வன்முறை நடந்த ஆறு வாக்கு சாவடிகளில் 30ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26 ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது உக்ருள், ஷங்ஷாங் சிங்காய், காரோங், ஒயினாம் உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில், அந்த வாக்கு சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.