கொல்கத்தா ஏப்ரல், 26
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் பணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி இப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 21 முறையும் பஞ்சாப் அணி 11 முறையும் வென்றுள்ளன.