சென்னை ஏப்ரல், 17
தெலுங்கு திரை உலகை ரசிகர்களால் ‘காட் ஆப் மாஸ்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிகின்றன. சென்டிமென்ட், ஆக்சன் பாணியிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த அவர் தனது பார்வையை கோடம்பாக்கத்தில் இளம் இயக்குனர்கள் பக்கம் திருப்பியுள்ளார். கிரைம், கில்லர் கதைக்களத்தில் நடிக்க அவருக்கு ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.