விழுப்புரம் ஏப்ரல், 10
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர் மகளிர் உரிமைத்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவை பாஜகவிற்கு பிடிக்கவில்லை மீண்டும் பாஜாக வென்றால் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்றார். மேலும் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் வென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் எனவும் கூறினார்.