சென்னை மார்ச், 30
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு மனு பரிசீலனை நடந்து 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் அத்துடன் சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகளுக்கும் சின்னம் ஒதுக்கப்படும்.