அரியலூர் மார்ச், 31
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.
இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார் கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்றபோது பறக்கும் பறை அதிகாரிகள் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தி அதில் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர். சிறிது நேரம் சோதனைக்கு பின்னர் காரில் ஏதுமில்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.